Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கொரோனா எதிரொலி…. ஒரு நாள் முழு ஊரடங்கு…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் பலனாக தமிழகத்தில் குறைந்து கொண்டே வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு வாரமாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கொரோணா பரவலை கட்டுப்படுத்த இன்று பால், மருந்தகம், மளிகை கடை, காய்கறி கடைகள் மற்றும் உணவகங்கள் தவிர பிற கடைகள் அனைத்தும் இயங்க முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதிகளில் 11 இடங்கள் உட்பட மாவட்டம் முழுவதும் இருபத்தி நான்கு இடங்களில் கடைகளும் அடைக்கப்பட்டன. மேலும் இந்த பகுதிகளில் 12 டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.

Categories

Tech |