ரஷ்யாவில் காட்டுப்பகுதிக்குள் நடைபெற்ற திருமணத்தில் பங்கேற்க சென்ற இளம்பெண்ணை கரடி கொன்று தின்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவில் Sverdlovsk பிராந்தியத்தில் இருக்கும் taiga பகுதியில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் Yana Balobanova என்ற 24 வயதுடைய இளம்பெண் பங்கேற்க சென்ற போது, நண்பர்களுடன் சண்டைபோட்டு விட்டு தனியாக சென்றிருக்கிறார். அதன்பின்பு அவரை காணவில்லை.
எனவே, பதறிப்போன நண்பர்கள் உடனடியாக அவசர உதவிக்குழுவினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு குழுவினர், அன்று இரவிலிருந்து, அடுத்த நாள் வரை Yana-வை தீவிரமாக தேடி வந்தனர். எனினும் அவர் கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் மோப்ப நாய்களுக்கு கரடியின் வாசனை தெரிந்ததால் அவை ஆரவாரமாக சத்தமிட்டுள்ளது.
மேலும், கரடியின் கால் தடங்கள் தெரிந்துள்ளது. எனவே மீட்பு குழுவினர் அந்த பெண்ணை கரடி தின்றிருக்கும் என்று கூறுகிறார்கள். எனவே அவரை இனிமேல் உயிரோடு மீட்பது இயலாது என்று கூறியுள்ளார்கள். எனினும் Yana-வின் தந்தை, தன் மகள் காணாமல் போனதில் சந்தேகம் ஏற்பட்டிருப்பதாகவும், திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டாம் என்று தான் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர், மணப்பெண் மற்றும் திருமணத்தில் பங்கேற்றவர்களுக்கு மகள் காணாமல் போனதில் தொடர்பு இருப்பதாக கூறுகிறார். இதற்கிடையில் Yana தங்களின் திருமணத்தில் பங்கேற்கவில்லை என்று மணப்பெண்ணும் புது மாப்பிள்ளையும் கூறியிருப்பது மேலும் குழப்பத்தை அதிகப்படுத்தியுள்ளது.