நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில் அனைத்து மாநிலங்களிலும் தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்ததனால் பாதிப்பு சற்று குறைந்துள்ளது. இதற்கு மத்தியில் கொரோனா மூன்றாவது அலை பரவலாம் என்று செய்தி பரவி வருகிறது.
இந்நிலையில் கொரோனா மூன்றாவது அலை இந்தியாவில் பரவ வாய்ப்பில்லை. இருப்பினும் அது பரவுவதும், பரவாமல் இருப்பதும் பாதுகாப்பு நடைமுறைகளை மக்கள் கடைபிடிப்பதை பொருத்தே அமையும் என்று எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.கொரோனா மூன்றாவது அலையில் சிறுவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக பொதுவாக அச்சம் நிலவுகிறது. ஏனெனில் பெரியவர்கள் தடுப்பூசி போட்டுள்ளனர். சிறியவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார்.