தமிழகத்தில் ஆகஸ்ட் 19ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் சூறாவளி காற்று வீசும் என்பதால் வங்க கடல் பகுதிக்கு 5 நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
Categories