நடிகை மீரா மிதுன் பட்டியல் இன மக்களை அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டார். இதை பார்த்த பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் அவரை கைது செய்யவும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து மீராமிதுன் தன்னை கைது செய்து பார்க்கும்படி காவல்துறையினருக்கு சவால் விட்டதையடுத்து காவல்துறையினர் நேற்று கேரளா மாநிலத்தில் உள்ள நட்சத்திர சொகுசு விடுதி ஒன்றில் அவருடைய நண்பர் உடன் இருந்த நிலையில் அவரை கைது செய்தனர்.
இந்நிலையில் தற்போது மீராமீதுனை சென்னை அழைத்து வந்துள்ளனர். இதனையடுத்து அவருடைய நண்பர் அபிஷேக் ஷியாமையும் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். மீராமீதுன் குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாக வந்த புகாரை அடுத்து அவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.