Categories
Uncategorized

75வது சுதந்திர தினவிழா…. வலுவான ஜனநாயகம் உருவாகுதல்…. வாழ்த்து தெரிவித்த அமெரிக்கா நாடாளுமன்ற உறுப்பினர்கள்….!!

சுதந்திர தினவிழாவிற்காக அமெரிக்கா நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியா மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இந்தியா முழுவதும் 75 வது சுதந்திர தினவிழாவானது சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அமெரிக்கா செனட் சபையின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜான் கார்ரின் மற்றும் மார்க் வார்னர் ஆகியோர் வாழ்த்துக்கள் கூறியுள்ளனர். அதிலும் முக்கியமாக விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் அமெரிக்கா ஜனநாயக கட்சியைச் சேர்ந்த மார்க் வார்னர் வாழ்த்து செய்தி ஒன்றை கூறியுள்ளார்.

 

அதில் “75 ஆண்டுகால சுதந்திரத்திற்காக நான் இந்திய மக்களை வாழ்த்த ஆசைப்படுகிறேன். இப்பொழுது உலகில் இரண்டு முக்கியமான ஜனநாயக நாடுகளுக்கு இடையேயான உறவானது வலுவடைந்து முன்னேறிச் செல்வது மிக முக்கியமானதாகும். மேலும் இந்தியாவின் 75 ஆண்டுகால சுதந்திரத்திற்கு பிறகு நாடானது வலுவான ஜனநாயகத்தை நோக்கி அடியெடுத்து வைத்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |