நீட் குறித்து மாணவர்களை குழப்பி விட்டதால் தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை குறைந்து விட்டது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
தமிழக பட்ஜெட் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பொதுவாகவே ஒரு நிதிநிலை அறிக்கையில் சொல்கிறார்கள் ஒரு வருஷத்தில் நிறைவேற்ற முடியாததை 5வருஷத்தில் நிறைவேற்றுவோம் என்று. ஆனால் தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளில் இதே போல எங்கயாவது சொல்லி இருக்கீங்களா ? நாங்கள் ஆட்சிக்கு வந்தால்…. நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றுவோம்…. இந்த ஆண்டில் இதை நிறைவேற்றுவோம்…. அடுத்த ஆண்டில் இதை நிறைவேற்றுவோம் என சொன்னீர்களா ?
ஆட்சிக்கு வந்தால் நீட்டே வராது தமிழ்நாட்டில்… என நீட்டா சொன்னீங்க… நீட் என்ன ஆச்சு இப்போ ? நாங்கள் தெளிவா ஒரு முடிவெடுத்தோம். தமிழ்நாட்டிற்கு எந்த காலத்திலும் நீட் தேவையில்லை. இதுதான் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஒரு நிலை… ஸ்டாண்ட் என்று சொல்லக்கூடிய எங்கள் நிலைப்பாடு. ஆனால் நாங்கள் ஒரு பக்கம் ஒரு சட்ட போராட்டம், மசோதா சட்டமன்றத்திலே கொண்டு வந்து மத்திய அரசு ஒப்புதல் அளித்து தொடர்ந்து நாங்கள் அழுத்தம் கொடுத்துக் கொண்டிருந்தோம்.
ஆனால் எங்களைப் பொருத்தவரை ஒரு பக்கம் அழுத்தம் கொடுத்து நீட் விலக்கு தேவை என்பது எங்களுடைய வாதம். அதேநேரத்தில் பயிற்சி சென்டர்ஸ் நிறையா ஓபன் செய்து மாணவர்களை தயாராகுங்கள்…. ஒரு காலத்துல நீட் இல்லாமல் செய்வதற்கு நாங்கள் சட்ட போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றோம் என சொன்னோம். அதனால் மாணவர்கள் படித்தார்கள்…. எங்கள் ஆட்சி காலத்தில் நீட் தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது.
இப்போது கல்வியமைச்சர் என்ன சொல்றாரு ?… நீட்டு எழுதுவதற்கு மாணவர்களுக்கு ஆர்வம் இல்லை. போன தடவை கம்பேர் பண்ணும்போது இந்த தடவை குறைவாக தான் எண்ணிக்கை உள்ளது என சொல்லுறாங்க. இதில் இருந்து என்ன தெரியுது ? யார் மாணவர்களை குழப்பி விட்டது ? யார் திசை மாற்றி விட்டது ? ஒழுங்கா என்ன சொல்லி இருக்கணும் ? எங்களை பொறுத்தவரை தமிழகத்துக்கு நீட் தேவை இல்லை.
2010இல் காங்கிரஸ் கொண்டு வந்தாங்க. 2010இல் திமுக ஆட்சி தான் தமிழகத்தில் இருந்தது. திமுக – காங்கிரஸ் கூட்டணியில் நீட் வந்தது. இது ஒரு பக்கம் இருக்கட்டும்… இவர்கள் என்ன சொல்லி இருக்கணும் ? நீங்க தயாராகுங்கள்…. ஆனால் ஒரு கட்டத்தில் நீட்டே தேவையில்லாமல் செய்கின்றோம் என சொல்லி இருந்தால் மாணவர்கள் படிச்சு இருப்பாங்க….
ஆனால் தவறான ஒரு கருத்துக்களை மாணவர்களுக்கு பரப்பி மாணவர்களை குழப்பி அவர்களை படிக்க விடாமல் செஞ்சு நீட்டிக்கும் தேர்வுக்கும் தயாராக முடியாத அளவுக்கு…. நீட் தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை குறைந்த அளவாக செல்ல காரணம் யார் ? முழுமையான அளவுக்கு திமுக அரசு ஒரு தவறான வகையில் நீட் விஷயத்தை கையாண்டது காரணமாக இன்று நீட் தேர்வு எழுதுவோம் எண்ணிக்கை குறைந்துவிட்டது என தெரிவித்தார்.