மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த 2 1/2 லட்ச ரூபாயை திருடிச் சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள சிந்தாமணி மேலரதவீதி பகுதியில் சித்த ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்தின் செலவிற்காக டி.என். புதுக்குடி பகுதியில் அமைந்திருக்கும் வங்கி ஒன்றில் ரூபாய் 2 1 /2 லட்சம் எடுத்துள்ளார். இந்நிலையில் அதை மோட்டார் சைக்கிளில் உள்ள பெட்டியில் வைத்துவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்திருக்கிறார். அப்போது தெற்கு பகுதியில் கொரோனா தடுப்பூசி போடுகிறார்களா என கேட்பதற்காக மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டுச் சென்றுள்ளார்.
இதனை அடுத்து வெளியே வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த 2 1/2 லட்ச ரூபாய் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன்பின் இது குறித்து சித்தராஜ் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று அங்கே பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்துள்ளார். மேலும் மோட்டார்சைக்கிளில் பெட்டியை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.