Categories
சினிமா தமிழ் சினிமா

கணவரின் ஆதரவோடு…. சினிமாவில் பெரியளவு சாதிப்பேன்…. நடிகை காஜல் அகர்வால் நம்பிக்கை ….!!!

நடிகை காஜல் அகர்வால் கணவரின் ஆதரவோடு சினிமாவில் பெரிய அளவில் சாதிப்பேன் என்ற நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்து வருபவர் நடிகை காஜல் அகர்வால். இவர் சமீபத்தில் தனது நீண்டநாள் நண்பர் கவுதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்னும் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் காஜல் அகர்வால் சமீபத்தில் கடை திறப்பு விழா ஒன்றில் கலந்து கொள்ளும்போதும் பேட்டியளித்துள்ளார்.

அப்போது அவர் கூறியதாவது, “திருமணத்திற்குப் பின்னரும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழி படங்களில் நடித்து வருகிறேன். நான் தொடர்ந்து சினிமாவில் நடிப்பதற்கு முதல் காரணமே எனது கணவர் கவுதம் தான். அவரது ஆதரவால் நான் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறேன். தொடர்ந்து அவர் அளிக்கும் ஆதரவால் சினிமாவில் மிகப்பெரிய அளவில் சாதிப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்று கூறியுள்ளார்.

Categories

Tech |