Categories
உலக செய்திகள்

எனக்கு 64.. உனக்கு 24…. கமிட் ஆன பாட்டியின் காதல் கதை… வைரல் புகைப்படம்…..!!!!

அமெரிக்காவைச் சேர்ந்த 61 வயது பெண் செர்லி மெக்கிரிக்கோர். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவர் தனது மகன்களை விட சிறியவரான 24 வயது குரான் மெக் என்பவரை காதலித்து வருகிறார். தன்னை விட 37 வயது வித்தியாசம் கொண்ட அவரை குரான் மெக்கும் விரும்புகிறார்.

குரான் மெக்கிற்கு 15 வயது இருக்கும் போது இருவரும் சந்தித்துள்ளனர். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட நட்பு தொடர்ந்தது. இருவரும் நெருக்கமாக டிக்டாக் வீடியோ வெளியிட்டுள்ளனர். அப்போது செர்லியை பலரும் கிண்டல் செய்துள்ளனர். அதன் பின்னர் இருவரும் நெருக்கமாக பழகியுள்ளனர். அப்பொழுது குரான் மெக்கேன் கொஞ்சம் கொஞ்சமாக செர்லி மீது இருக்கும் காதலை வெவ்வேறு விதமாக வெளிக்காட்டியுள்ளார். இந்நிலையில் தற்போது இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வருகின்றனர்.

இது குறித்து செர்லி கூறும்போது,  “எங்கள் காதலை பலர் கிண்டல் செய்வார்கள். சில நேரங்களில் அதை நினைத்து அழுகையாக இருக்கும். ஆனால் எல்லா நேரங்களும் அவன் தான் எனக்கு துணையாக நிற்பான். ” என கூறினார். இவர்கள் இருவரும் கடந்த ஜூலை 31ல் கமிட் ஆகிவிட்டு தற்போது தங்களது தாம்பத்திய வாழ்க்கை சிறப்பாக இருப்பதாக கூறியுள்ளனர்.

Categories

Tech |