நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ரகசியமாக அடிக்கடி ரோட்டுக் கடையில் தான் சாப்பிடுவார்கள் என்று தெரியவந்துள்ளது.
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவரது நடிப்பில் உருவாகியுள்ள நெற்றிக்கண் திரைப்படம் பிரபல ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதற்கிடையில் பிரபல விஜய் தொலைக்காட்சியின் முக்கிய நிகழ்ச்சியான காபி வித் டிடி யில் நடிகை நயன்தாரா கலந்து கொண்டுள்ளார். அப்போது அவர் தனது காதலன் விக்னேஷ் சிவனுடன் உள்ள காதல் குறித்து பல விஷயங்களை கூறியுள்ளார்.
அந்தவகையில் நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் அடிக்கடி ரகசியமாக சாப்பிட செல்வார்களாம். ஏனென்றால் இவர்கள் இருவரும் நன்றாகச் சாப்பிடக் கூடியவர்கள். அதுமட்டுமின்றி அவர்கள் இருவருக்கும் பிரியாணி மிகவும் பிடிக்குமாம். அதுவும் அடிக்கடி அவர்கள் ரோட்டுக் கடையில் தான் சாப்பிடுவோம் என்று கூறியுள்ளனர்.