பிரபல தொகுப்பாளினி அர்ச்சனா தொலைக்காட்சிக்கு முதல் முதலாக வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.
ஜீ தமிழ் விஜய் டிவி உள்ளிட்ட சேனல்களில் தொகுப்பாளினியாக பணியாற்றி பிரபலமானவர் தான் தொகுப்பாளினி அர்ச்சனா . இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் அனைத்துமே கலகலப்பாக செல்லும். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இவர் மேலும் பிரபலமானர்.
இதை தொடர்ந்து மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த இவருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் தற்போது வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் தொகுப்பாளினி அர்ச்சனா தொலைக்காட்சிக்கு முதல் முதலாக வந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படத்தை அர்ச்சனாவின் ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.