பட்டியலினத்தோரை குறித்து இழிவாக பேசியதாக நடிகை மீரா மிதுனை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கேரளா ஆலப்புழா மாவட்டத்தில் நேற்று கைது செய்தனர். இதனையடுத்து,கேரளா நீதிமன்றத்தில் மீரா மிதுனை ஆஜர்படுத்தி,அனுமதி பெற்றுக் கொண்டு, போலீஸ் வாகனம் மூலமாக,சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு போலீசார் அழைத்துவந்தனர். இதனையடுத்து,காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சென்னை மத்திய குற்றப்பிரிவில் மீரா மிதுனிடம் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் முதற்கட்ட விசாரணை நடத்தினர்.
ஆனால்,அவர் சரியான ஒத்துழைப்பு வழங்வில்லை என தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து,அவர் சைதாப்பேட்டையில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.இந்நிலையில்,வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் அவர்கள் மீரா மிதுனை வருகின்ற 27 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.