விக்ரம், துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் சியான்-60 படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விக்ரம் தற்போது பொன்னியின் செல்வன், கோப்ரா, சியான் 60 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் சியான் 60 படத்தில் விக்ரமின் மகனும், நடிகருமான துருவ் விக்ரமும் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் சிம்ரன், வாணிபோஜன், பாபி சிம்ஹா, சனத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
ITS A WRAP !! #Chiyaan60 #WrapForChiyaan60#ChiyaanVikram #DhruvVikram @karthiksubbaraj @Music_Santhosh @kshreyaas @SimranbaggaOffc @vanibhojanoffl @actorsimha @Lalit_SevenScr @proyuvraaj @sooriaruna pic.twitter.com/rJpxWzQYmr
— Seven Screen Studio (@7screenstudio) August 14, 2021
கடந்த ஒரு மாதமாக இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் சியான் 60 படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. இதனை படக்குழுவினர்கள் அனைவரும் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இதையடுத்து இந்த படத்தின் பின்னணி பணிகள் தொடங்கப்பட உள்ளது. விரைவில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக், டீஸர் ஆகியவை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.