Categories
உலக செய்திகள்

ஹைதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. இடிபாடுகளுக்குள் மாட்டிக்கொண்ட தாய்-மகன்.. போராடி மீட்ட மக்கள்..!!

ஹைதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் ஒரு பெண்ணும் குழந்தையும் மாட்டிக்கொண்ட வீடியோ வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதியில், நேற்று மிகப்பெரிய நிலநடுக்கம் உருவானது. இது 7.2 ஆக ரிக்டர் அளவில் பதிவானது. ஹைதியின் தலைநகரான Port-au-Prince-க்கு மேற்கில் 7.5 மைல் தூரத்திலும், Petit Trou de என்ற நகரத்திலிருந்து, 5 மைல் தூரத்திலும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உருவானதாக புவியியல் ஆய்வு மையம் கூறியிருக்கிறது.

அதன்பின்பு, சுனாமி உருவாகும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் நிலநடுக்கத்தினால் பல வீடுகள் சேதமடைந்து தரைமட்டமானது. இதில் மக்கள் பலரும் இடிபாடுகளுக்குள் மாட்டிக்கொண்டார்கள். இதில் 220 க்கும் அதிகமானோர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதில், ஒரு பெண்ணும், அவரின் மகனும் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டார்கள். அவர்களை மீட்க உறவினர்களும் அப்பகுதியை சேர்ந்த மக்களும் போராடியிருக்கிறார்கள். ஒருவழியாக இருவரையும் உயிரோடு மீட்டுள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவி வருகிறது.

Categories

Tech |