பீகாரில் துப்பாக்கி முனையில் அக்கா மற்றும் தங்கையை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் சுபால் மாவட்டத்தில் உள்ள ஹுசைனாபாத் என்ற கிராமத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் கண்காட்சிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் அங்குள்ள சிலோன் ஆறு அருகே சென்று கொண்டிருந்த சமயம் சில இளைஞர்கள் அங்கு வந்து வழிமறித்தனர். பின்னர் அவர்களை மிரட்டிய கும்பல் அந்த குடும்பத்தில் உள்ள இரண்டு சகோதரிகளை மட்டும் தனியாக நிறுத்தி வைத்து மற்றவர்களை தனியாக ஒரு இடத்தில் அமர வைத்தனர்.
அதன் பின் அந்த 2 சகோதரிகளில் ஒருவர் மைனர். மைனர் என்றும் பாராமல் துப்பாக்கியால் மிரட்டி அந்த இளைஞர்கள் இருவரையும் கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்தனர். பின்னர் மறுப்பு தெரிவித்து போராடிய மூத்த சகோதரியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபற்றி பிர்புர் பகுதி ஏ.எஸ்.பி ராம்நாத் குமார் கவுசல் கூறும்போது, செவ்வாய்க்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது. பாலியல் வன் கொடுமைக்கு உள்ளான 2 பெண்களையும் மருத்துமனைக்கு அனுப்பி உள்ளோம். இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும், மேலும் அந்த இளைஞர்களை தேடி வருவதாகவும் தெரிவித்தார். சகோதரிகளை கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.