பயணிகளின் வசதிக்கேற்ப ரயில்வேத்துறை பல்வேறு வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. இதனால் பயணிகளும் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்த பிறகு அதனை ரத்து செய்வதற்கு பதில் வேறொருவருக்கு மாற்றும் வசதியை ரயில்வே துறை தற்போது அறிமுகம் செய்துள்ளது.
அதற்கு டிக்கெட்டை பிரிண்ட் அவுட் எடுத்து அருகிலுள்ள ரயில் நிலைய முன்பதிவு கவுண்டருக்கு சென்று யார் பெயருக்கு டிக்கெட்டை மாற்றப்படவேண்டுமோ அவருடைய ஆதார் அல்லது வாக்காளர் அட்டை போன்ற அடையாள சான்றை எடுத்து செல்ல வேண்டும். அதன் மூலம் கவுண்டரில் டிக்கெட்டை மாற்ற விண்ணப்பிக்கவும். இதனையடுத்து டிக்கெட் வேறொருவர் பெயருக்கு மாறிவிடும்.