பாளையங்கோட்டை சிறையில் உள்ள கைதி திடீரென உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள் ஞானியார்புரம் பகுதியில் தேவதாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரை காவல்துறையினர் கடந்த 7 – ஆம் தேதி கஞ்சா வழக்கில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் திடீரென தேவதாஸுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இதனால் அங்குள்ள சிறைக்காவலர்கள் தேவதாசை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே தேவதாஸ் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து காவல்துறையினர் தேவதாஸின் உடலை நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.