Categories
சினிமா தமிழ் சினிமா

காயத்துடன் படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் அருண் விஜய்… அவரே வெளியிட்ட பதிவு…!!!

‘AV 33’ படப்பிடிப்பின் போது நடிகர் அருண் விஜய் கையில் சிறிது காயம் ஏற்பட்டது.

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அருண் விஜய் தற்போது பாக்ஸர், சினம், அக்னி சிறகுகள், பார்டர் உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இதுதவிர அருண் விஜய்யின் 33-வது படத்தை இயக்குனர் ஹரி இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் பிரகாஷ் ராஜ், யோகி பாபு, ராதிகா, அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார் .

சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பின்போது நடிகர் அருண் விஜய்யின் வலது கையில் சிறிது காயம் ஏற்பட்டது. இந்நிலையில் காயத்திற்கு சிகிச்சை எடுத்துக் கொள்ளும் புகைப்படத்தை நடிகர் அருண் விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . அதில் ‘படப்பிடிப்புக்கு பின் சிகிச்சை பெற்று வருகிறேன். வலி விரைவில் குறையும் என நம்புகிறேன். ஒரு பெரிய அதிரடி காட்சியை அடுத்தநாள் படமாக்குகிறோம்’ என பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |