20 வருடங்களுக்குப்பின் காபூல் நகருக்குள் புகுந்த தலிபான் தீவிரவாதி கண்ணீர் விட்டு அழுத காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஆப்கானிஸ்தானின் தலைநகரம் காபூல் நகரின் எல்லையை தலிபான் தீவிரவாதிகள் சூழ்ந்து கொண்டார்கள். இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் ஜனாதிபதி அரண்மனையில், தலீபான் தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதற்கிடையில், நாட்டின் ஜனாதிபதி அஷ்ரப் கனி, தன் பதவியை ராஜினாமா செய்தார்.
https://twitter.com/sanaayesha__/status/1426858054935478277
அதன்பின்பு, அலி அஹ்மத் ஜலாலி, இடைக்கால அரசின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 20 வருடங்களுக்கு பின்பு காபூலின் எல்லைக்குள் புகுந்த தலிபான் தீவிரவாதி ஒருவர் சாலையில் மண்டிபோட்டு கண்ணீர் விட்டு நிலத்தை முத்தமிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தலிபான் தீவிரவாதிகள், எல்லைப் பகுதியை சூழ்ந்து கொண்டார்கள். எனவே தற்போது அவர்களை நகருக்குள் செல்ல வேண்டாம் என்று தலிபான் தீவிரவாதிகளின் தலைமை உத்தரவிட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது