நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் ஓரளவிற்கு குறைந்து வருவதால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை மாநில அரசுகள் அறிவித்து வருகிறது. அந்த வகையில் மாணவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் நாளை முதல் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுவதாக அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் ஆசிரியர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும். 50% மாணவர்களுடன் வகுப்புகளை நடத்தவும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது .மேலும் 50% மாணவர்கள் ஆன்லைன் மூலமாக பங்கேற்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.