பேருந்தில் சென்றுகொண்டிருந்த பெண்ணிடம் இருந்து 3 பவுன் தங்க சங்கிலியை பரித்துக்கொண்டு சென்ற மர்ம நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் மானாமதுரையில் உள்ள காவல்நிலையத்தில் தலைமை காவலராக சரவணன் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சரவணன், அவரது மனைவி மினர்வா மற்றும் குழந்தைகளுடன் மனைவியின் சொந்த ஊரான பெரியபட்டினத்திற்கு செல்வதற்காக ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பெரியபட்டினத்திற்கு பேருந்தில் சென்று கொண்டிருந்துள்ளனர்.
அப்போது பேருந்தில் சற்று கூட்டமாக இருந்துள்ளது. இதனை பயன்படுத்திய மர்ம நபர் மினர்வா அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றுள்ளார். இதனையடுத்து சங்கிலியை காணாததால் அதிர்ச்சியடைந்த மினர்வா இதுகுறித்து கேணிக்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.