டிஎன்பிஎல் டி20 தொடரின் திருச்சி அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் சேப்பாக் அணி 183 ரன்களை குவித்துள்ளது .
5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 தொடரின் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த இறுதிப் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன .இதில் டாஸ் வென்ற திருச்சி வாரியர்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் பேட் செய்த சேப்பாக் அணியில் தொடக்க வீரர்களாக கவுசிக் காந்தி – ஜெகதீசன் ஜோடி களமிறங்கினர். இருவரும் ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே சிறப்பாக விளையாடினர். இதில் கவுசிக் காந்தி 19 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அப்போது சேப்பாக் அணி 58 ரன்கள் குவித்திருந்தது. இதன்பிறகு களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஒருபுறம் விக்கெட்டுகளை இழக்க மறுபுறம் அபாரமாக விளையாடிய ஜெகதீசன் 58 பந்துகளில் 7 பவுண்டரி 2 சிக்சர்கள் அடித்து விளாசி 90 ரன்னில் ஆட்டமிழந்தார். அப்போது சேப்பாக் அணி 17.5 ஓவர்களில் 155 ரன்கள் எடுத்திருந்தது. இதன் பிறகு களமிறங்கிய வீரர்களும் அதிரடி ஆட்டத்தை காட்ட இறுதியாக 20 ஓவர் முடிவில் சேப்பாக் அணி 6 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் குவித்துள்ளது. தற்போது களமிறங்கியுள்ள திருச்சி அணி 184 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடி வருகிறது.