Categories
மாநில செய்திகள்

கொரோனாவை எதிர்த்து…. சிறப்பாக செயல்பட்ட முதல்வருக்கு…. ஆளுநர் பாராட்டு…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும்  மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு ரூபாய் 4 ஆயிரம் நிதி உதவி அறிவிக்கப்பட்டது. பேருந்துகளில் மகளிருக்கு இலவசமாக பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை முதல்வர் மு.க ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அதுமட்டுமல்லாமல் கொரோனா பேரிடரை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்ததால் பாதிப்பு ஓரளவிற்கு குறைந்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாம் அலையை எதிர்த்து சிறப்பாக செயல்பட்டதற்காக முதல்வர் மு.க ஸ்டாலினை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பாராட்டியுள்ளார். சுதந்திர தின விழாவையொட்டி இன்று ராஜ்பவனில் அமைச்சர்கள், எம்எல்ஏ, எம்பிகளுக்கு ஆளுநர் தேநீர் விருந்து அளித்தார்.   பல பிரமுகர்கள் கலந்து கொண்ட இந்த தேநீர் விருந்தில் மக்களை தடுப்பூசி செலுத்த வேண்டி கொண்டுள்ளார்.

Categories

Tech |