நடிகை குஷ்பூ அவர்களின் சிறுவயது புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் ‘சின்னத்தம்பி’ திரைப்படத்தின் மூலமாக அனைவரிடையே பிரபலமானவர் நடிகை குஷ்பூ. இதனை அடுத்து இவர் ரஜினி, கமல், கார்த்திக், பிரபு போன்ற பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். இதனை தொடர்ந்து தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘அண்ணாத்த’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
மேலும் வெள்ளித்திரையில் மட்டுமின்றி சின்னத்திரையிலும் பல முன்னணி தொடர்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார். இவர் இயக்குனர் சுந்தர். சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நடிகை குஷ்பூவின் சிறுவயது புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.