Categories
மாநில செய்திகள்

நாளை முதன்மை கல்வி அலுவலர்களுடன் முக்கிய ஆலோசனை…. வெளியான தகவல்…!!!

தமிழகத்தில்கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. இதற்கு மத்தியில் அடுத்த கல்வியாண்டு தொடங்கிவிட்டதால் பள்ளிகள் எப்போது திறக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகளை திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது.

இதனையடுத்து செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் சுழற்சி முறையில் கட்டாயம் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் கொரோனா வழிமுறைகளை பின்பற்றபடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் 17ஆம் தேதி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது. அதில் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி, கல்வி கட்டணம், சிறப்பு எழுத்தறிவுத் திட்டம், 1 முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் பாடவாரியாக மதிப்பீடு, வினாக்கள் தயாரிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |