Categories
அரசியல் மாநில செய்திகள்

அதான் நான் அப்படி சொன்னேன்…! ஜெயக்குமார் சொன்ன டிமிக்கி …! விளக்கிய மாஜி அமைச்சர் …!!

தமிழக அரசின் பட்ஜெட்டை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் டிஜிட்டல் டிமிக்கி என விமர்சித்துள்ளார்.

தமிழக அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டுக்கு முன்பு வெளியிட்ட வெள்ளை அறிக்கை குறித்த கேள்விக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர், நேற்று ஒன்று, இன்று ஒன்று, நாளை ஒன்று இது தான் திமுக உடைய  வாடிக்கையான சொற்கள். திமுக ஆட்சியில் டிவி கொடுத்தாங்க….  ரேஷன் கார்டு அடிப்படையில்தான் கொடுத்தாங்க…. உணவு பங்கீட்டு அட்டை மூலமாகத்தான் கொடுத்தாங்க என தெரிவித்தார்.

மேலும்,  பெண்களுக்கான உரிமை தொகை அரிசி குடும்ப அட்டை வைத்திருக்கின்ற பெண்கள் அனைவருக்கும் கிடையாது… குறிப்பிட்ட வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள, மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கின்ற பெண்களுக்கு மட்டுமே தான் கொடுப்போம். அதற்க்கு ஒரு கமிட்டி அமைத்து கணக்கெடுப்போம்  என சொல்லி உள்ளார்கள். ஆனால் தேர்தலின் போது பெண்களுக்கு உரிமை தொகை என்று சொன்னார்கள் என்ற கேள்விக்கு,

பதிலளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதான் டிமிக்கி கொடுக்குறாங்க என சொன்னேன். இதான் டிஜிட்டல் டிமிக்கி. பொதுவாகவே வெள்ளையறிக்கை என்பது எப்பொழுதுமே ஒரு சட்டமன்றம் நடக்கும் போது ஒவ்வொரு ஆண்டும் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவது வழக்கம். தாக்கல் செய்யப்படும் போது மாநிலத் உடைய சொந்த வரி வருவாய்,  மாநிலத்தை செலவு,

மாநில வருவாய் பற்றாக்குறை… அதை எப்படி ஈடு செய்ய போகிறோம். இதெல்லாம் பட்ஜெட்டில் சொல்றோம் ஒவ்வொரு வருஷமும்… அதை தான்  சொல்லிஇவர் வெளியே சொல்லி  இருக்கார். நான் கேட்பது என்னன்னா….   சட்டமன்றம் ஆகஸ்ட் 13  நடக்குது.  ஒன்பதாம் தேதி அவர் வந்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டிய அவசியம் என்ன ? பட்ஜெட் தாக்கல் பண்ணிட்டு, திங்கள்கிழமை சொல்லலாமே என தெரிவித்தார்.

Categories

Tech |