Categories
அரசியல் மாநில செய்திகள்

எங்க ஆளுங்க சும்மா இல்ல…! கிழி கிழினு கிழிச்சுடுவாங்க…. கெத்து காட்டிய மாஜி அமைச்சர் …!!

வெள்ளை அறிக்கையை வெளியில் வெளிடாமல் சட்டமன்றத்தில் வைத்திருக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட வெள்ளை அறிக்கை குறித்து விமர்சித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இது உரிமை மீறல், சட்டமன்றத்தின் சட்டத்தை மதிக்காமல்.. பேரவை  விதிகளை மதிக்காமல்….  எல்லாமே இவர்கள் இஷ்டத்துக்கு கையில் எடுத்துக்கொண்டு,  இவர்களே வெளியே சொல்லுறாங்க என்றால்…. சட்டமன்றம் இரண்டு மூணு மாசம் பொறுத்து நடக்குது அந்த சூழ்நிலையில் சொல்லலாம் ஒரு நாலு நாள் நடக்கும் போது வெளியே சொல்ல வேண்டிய அவசியம் என்ன இருக்கு.

ஒரு புதுக்கட்சி ஆட்சிக்கு வந்தால் கூட தெரியாதுன்னு சொல்லலாம். ஏற்கனவே ஆட்சியில் இருந்த கட்சி திமுக. முதல்வர் முக.ஸ்டாலின், இப்போதைய நிதியமைச்சர் எத்தனையோ தடவை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். அவர்கள் அனைவருக்கு பட்ஜெட் டாக்குமெண்ட் கொடுக்குறோமே.. அதில் எவ்வளவு கடன் இருக்கு ? எவ்வளவு வருவாய் இருக்கு ? எவ்வளவு வருவாய் செலவினம் ? எவ்வளவு பொதுத்துறை நிறுவனகளுக்கு நஷ்டம் ?

எப்படி அதை ஈடுக்கட்டுவது ? என எல்லாமே அதில் சொல்லி இருக்கோம். அப்படி சொல்லி இருக்கும் போது அவசரம் அவசரமாக 13ஆம் தேதிக்கு முன்னாடி 9ஆம் தேதியே வெள்ளை அறிக்கை கொடுக்கின்றார்கள் என்றால் ? எதுக்குமே ஒரு மரபு விதி என இருக்கு. சட்டமன்றம் கூடுகின்ற நாட்கள்…. இல்ல அதற்கு அருகாமையில்….

ஒரு நாள் நான்கு நாள் தான் இருக்கு. அத சட்டமன்றத்தில் சொல்லிட்டு போங்க.  சட்டமன்றத்தில் சொன்னால் அதை வைத்தே விவாதம் நடக்கும் அல்லவா…  கிளி கிளி கிளினு கிழிச்சிடுவாங்க எங்க ஆளுங்க… அதுக்காகவே வெளியே சொன்னது அது. வெளியே சொன்னவுடனே என்னாயிற்று ? அதை மக்கள் வந்து முழுமையான நம்பல. அது வெற்று அறிக்கை என்று தெரியும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

Categories

Tech |