தனுசு ராசி அன்பர்களே.! புதிய பொறுப்புகள் வந்து சேரும்.
இன்று சிக்கல்கள் விலகி சிகரத்தைத் தொடும் நாளாக இருக்கும். சாமர்த்தியமாக பேசி காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் இருக்கும். அலுவலகப் பணிகளை துரிதமாக நடத்துவீர்கள். குடும்பத்தில் சுப பலன்கள் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே பந்த பாசங்கள் அதிகரிக்கும். குழந்தைகளிடம் மனம் மகிழும் படியான சூழல் உருவாகும். குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். ஆனால் நீங்கள் அனைவரும் பார்த்து பேசி பழக வேண்டும். ரகசியங்களை பாதுகாக்க வேண்டும். மேலிடத்தின் மூலமாக நடக்க வேண்டிய காரியங்கள் தாமதமாக நடக்கும். சுயகௌரவம் இருக்கும். புதிய பொறுப்புகள் வந்து சேரும். பயணங்கள் கூட முன்னேற்றத்தை ஏற்படுத்தும். எதிரிகளின் தொல்லை இருந்தாலும் அதனை நீங்கள் கவனமாக கையாளுவீர்கள்.
பணியாளரிடம் அன்பாக பேசவேண்டும். அவர்களிடம் கோபங்களும் வாக்குவாதங்களும் செய்யவேண்டாம். வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். காதலில் உள்ளவர்களின் நிலைபாடுகள் சற்று மாறுபட்டதாக இருக்கும். மாணவர்களுக்கு மிகவும் நல்ல நாள். மாணவர்கள் எதையும் உற்சாகமாக செய்ய முடியும். கல்வி பற்றி அக்கறை இருக்கும். கல்வியில் சாதிக்க கூடிய அமைப்பு இருக்கும். மாணவர்கள் திட்டங்கள் தீட்டி வெற்றி பெறக் கூடிய சூழல் இருக்கும். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சிவபெருமானும் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு அதிர்ஷ்டமான எண்: 4 மற்றும் 6 அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு மற்றும் சிவப்பு