மீனம் ராசி அன்பர்களே.! கடன் பிரச்சினைகள் தீரும்.
இன்று பொது வாழ்க்கையில் உங்களை நீங்கள் அர்ப்பணித்துக் கொள்ளும் நாளாக இருக்கும். கண்டிப்பாக புகழ் உங்களை தேடி வரும். பாராட்டுக்கள் கண்டிப்பாக கிடைக்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். சமூகத்தின் பார்வை உங்களுக்கு அதிகமாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பதவி உயர்வு சம்பள உயர்வு போன்ற விஷயங்களை கேட்கப்படும். சுபகாரிய பேச்சுகள் நல்ல முடிவைத் தரும். சகோதரர்களுக்கு வேண்டியவைகளை செய்து கொடுப்பார்கள். இல்லத்தில் பெரிய அளவு மகிழ்ச்சி இருக்கும். கலகலப்பான சூழல் இருக்கும். கடுமையான பணிச்சுமை எல்லாம் குறைந்து நிம்மதி ஏற்படும். எதிர்பார்த்த பணம் கையில் வந்து சேரும். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு இருக்கும். பயணங்கள் செல்லும்போது கவனம் வேண்டும். தொழில் விரிவாக்கம் செய்யக்கூடிய எண்ணங்கள் வழிவகுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த பண வரவுகளை வந்து சேரும்.
கடன் பிரச்சினைகள் தீரும். வீண்பகை நட்பாக மாறும். நட்பு உங்களுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தும். குடும்ப பகை உருவாகும். உறவுகளுக்குள் இருந்த பகை எல்லாம் சரியாகும். திட்டமிட்டு எதையும் செய்வீர்கள். மாணவர்களுக்கு துணிச்சல் கூடும். கல்வி மீது அக்கறை ஏற்படும். கல்வியில் அதிக நாட்டம் இருக்கும். பெற்றோர் படும் கஷ்டத்தை உணர்ந்து நல்லபடியாக நீங்கள் செயல்படுவீர்கள். காதல் இனிமையைக் கொடுக்கும். காதலின் செயல்பாடுகள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். காதல் கைகூடி திருமணத்தில் போய் முடிய கூடிய வாய்ப்புகள் இருக்கின்றது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு அதிர்ஷ்டமான எண்: 7 மற்றும் 9 அதிர்ஷ்டமான நிறம்: பச்சை மற்றும் மஞ்சள்