Categories
கிரிக்கெட் விளையாட்டு

”டெஸ்ட், ODI , T20 ” கெவின் ஓ பிரைன் நிகழ்த்திய சாதனை…..!

டெஸ்ட், ODI , T20 என அனைத்திலும் சதம் விளாசிய 14ஆவது வீரர் என்ற சாதனையை அயர்லாந்து அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் கெவின் ஓ பிரைன் படைத்துள்ளார்.

அயர்லாந்து கிரிக்கெட் வீரர் கெவின் ஓ பிரைனை மறக்காத இந்திய ரசிகர்களே இருக்கமாட்டார்கள். ஏனெனில், உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் குறைந்த பந்துகளில் சதம் விளாசிய வீரர் என்ற சாதனயையை 2011இல் படைத்திருந்தார். இந்தியாவில் நடைபெற்ற 2011 உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியின் மூலம் அவர் அச்சாதனை படைத்திருந்தார். இன்றளவும் அவரது இந்தச் சாதனையை எவராலும் முறியடிக்க முடியவில்லை.

இதையடுத்து, டெஸ்ட் போட்டிகளில் அயர்லாந்து அணி சார்பாக சதம் விளாசிய முதல் வீரர் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார். ஒருநாள், டெஸ்ட் என இரண்டு ஃபார்மெட்டுகளிலும் அசத்திய இவர், எஞ்சியிருந்த டி20 போட்டியிலும் சிறப்பாக பேட்டிங் செய்துள்ளார். ஓமன், அயர்லாந்து, நெதர்லாந்து, ஹாங்காங், நேபாளம் உள்ளிட்ட ஐந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நடைபெற்றுவருகிறது.

இதில், ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில், தொடக்க வீரராக களமிறங்கிய கெவின் ஓ பிரைன் சதம் விளாசி மிரட்டினார். இதன்மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் முதல் சதம் விளாசிய அயர்லாந்து வீரர் என்ற பெருமையைப் பெற்றார். தொடர்ந்து பேட்டிங்கில் மிரட்டிய அவர் 62 பந்துகளில் 12 பவுண்டரி, ஏழு சிக்சர்கள் என 124 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இவரது பேட்டிங்கால் அயர்லாந்து அணி இப்போட்டியில் 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இப்போட்டியில், சதம் விளாசியதன் மூலம் அனைத்து விதமான போட்டிகளிலும் சதம் விளாசிய 14ஆவது வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

அனைத்து விதமான ஃபார்மெட்டுகளிலும் சதம் விளாசிய வீரர்கள் விவரங்கள்:

1. கிறிஸ் கெயில் (வெஸ்ட் இண்டீஸ்)

கிறிஸ் கெயில்

முதல் டெஸ்ட் சதம் : 175 ரன்கள், ஜிம்பாப்வேவுக்கு எதிராக, 2001
முதல் ஒருநாள் சதம் : 152 ரன்கள், கென்யாவுக்கு எதிராக, 2001
முதல் டி20 சதம் : 117 ரன்கள், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக, 2007

2. பிரெண்டன் மெக்கல்லம் (நியூசிலாந்து)

மெக்கல்லம்

முதல் டெஸ்ட் சதம் : 143 ரன்கள், வங்கதேசம் அணிக்கு எதிராக, 2004
முதல் ஒருநாள் சதம் : 166 ரன்கள், அயர்லாந்துக்கு எதிராக, 2008
முதல் டி20 சதம் : 116 ரன்கள்*, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 2010

3. மஹிலா ஜெயவர்த்தனே (இலங்கை)

ஜெயவர்தனே

முதல் டெஸ்ட் சதம் : 167 ரன்கள், நியூசிலாந்துக்கு எதிராக, 1998
முதல் ஒருநாள் சதம் : 120 ரன்கள், இங்கிலாந்துக்கு எதிராக, 1999
முதல் டி20 சதம் : 100 ரன்கள், ஜிம்பாப்வேவுக்கு எதிராக, 2010

4. சுரேஷ் ரெய்னா (இந்தியா)

ரெய்னா

முதல் டெஸ்ட் சதம் : 120 ரன்கள், இலங்கைக்கு எதிராக, 2010
முதல் ஒருநாள் சதம் : 116 ரன்கள், ஹாங்காங்கிற்கு எதிராக, 2008
முதல் டி20 சதம் : 101 ரன்கள், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக, 2010

5. திலகரத்னே தில்சான் (இலங்கை)

தில்ஷன்

முதல் டெஸ்ட் சதம் : 163 ரன்கள், ஜிம்பாப்வேவுக்கு எதிராக, 1999
முதல் ஒருநாள் சதம் : 117 ரன்கள், நெதர்லாந்துக்கு எதிராக, 2006
முதல் டி20 சதம் : 104 ரன்கள், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 2011

6. மார்டின் கப்தில் (நியூசிலாந்து)

கப்தில்

முதல் டெஸ்ட் சதம் : 189 ரன்கள், வங்கதேசத்துக்கு எதிராக, 2010
முதல் ஒருநாள் சதம் : 122 ரன்கள், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக, 2009
முதல் டி20 சதம் : 101 ரன்கள், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக, 2012

7. அகமது ஷேசாத் (பாகிஸ்தான்)

அகமது ஷேசாத்

முதல் டெஸ்ட் சதம் : 147 ரன்கள், இலங்கைக்கு எதிராக, 2014
முதல் ஒருநாள் சதம் : 115 ரன்கள், நியூசிலாந்துக்கு எதிராக, 2011
முதல் டி20 சதம் : 111 ரன்கள், வங்கதேசத்துக்கு எதிராக, 2014

8. டூபிளஸ்ஸிஸ் ( தென் ஆப்பிரிக்கா)

டூப்ளஸ்ஸிஸ்

முதல் டெஸ்ட் சதம் : 110 ரன்கள், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 2012
முதல் ஒருநாள் சதம் : 106 ரன்கள், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 2014
முதல் டி20 சதம் : 119 ரன்கள், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக, 2015

9. ரோகித் சர்மா (இந்தியா)

ரோகித் சர்மா

முதல் டெஸ்ட் சதம் : 177 ரன்கள், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக, 2013
முதல் ஒருநாள் சதம் : 114 ரன்கள், ஜிம்பாப்வேவுக்கு எதிராக, 2010
முதல் டி20 சதம் : 106 ரன்கள், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக, 2015

10. ஷேன் வாட்சன் (ஆஸ்திரேலியா)

வாட்சன்

முதல் டெஸ்ட் சதம் : 120 ரன்கள், பாகிஸ்தானுக்கு எதிராக, 2009
முதல் ஒருநாள் சதம் : 126 ரன்கள், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக, 2008
முதல் டி20 சதம் : 124 ரன்கள், இந்தியாவுக்கு எதிராக, 2016

11. தமிம் இக்பால் (வங்கதேசம்)

தமிம் இக்பால்

முதல் டெஸ்ட் சதம் : 128 ரன்கள், வெஸ்ட் இண்டீஸுக்கு , 2009
முதல் ஒருநாள் சதம் : 129 ரன்கள், அயர்லாந்துக்கு எதிராக, 2009
முதல் டி20 சதம் : 103 ரன்கள், ஓமனுக்கு எதிராக, 2016

12. கே.எல். ராகுல் (இந்தியா)

கே.எல்.ராகுல்

முதல் டெஸ்ட் சதம் : 110 ரன்கள், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 2015
முதல் ஒருநாள் சதம் : 100 ரன்கள், ஜிம்பாப்வேவுக்கு எதிராக, 2016
முதல் டி20 சதம் : 149 ரன்கள், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக, 2016

13. கிளென் மேக்ஸ்வெல் (ஆஸ்திரேலியா)

மேக்ஸ்வெல்

முதல் டெஸ்ட் சதம் : 104 ரன்கள், இந்தியாவுக்கு எதிராக, 2017
முதல் ஒருநாள் சதம் : 102 ரன்கள், இலங்கைக்கு எதிராக, 2015
முதல் டி20 சதம் : 145 ரன்கள், இலங்கைக்கு எதிராக, 2016

14. கெவின் ஓ பிரைன் (நெதர்லாந்து)

கெவின் ஓ பிரெய்ன்

முதல் டெஸ்ட் சதம் : 118 ரன்கள், பாகிஸ்தானுக்கு எதிராக, 2018
முதல் ஒருநாள் சதம் : 142 ரன்கள், கென்யாவுக்கு எதிராக, 2007
முதல் டி20 சதம் : 124 ரன்கள், ஹாங்காங்கிற்கு எதிராக, 2019

 

Categories

Tech |