நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவும், கல்வி தொலைக்காட்சி மூலமாகவும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் பள்ளிகள் திறப்பு குறித்த எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. நாடு முழுவதும் கடந்த 17 மாதங்களாக பள்ளிகள் மூடப் பட்டுள்ளது.
இந்நிலையில் அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களிடம் நடத்திய ஆய்வில், 92 சதவீதம் குழந்தைகள் தங்களது மொழி அறிவையும், 82 சதவீதம் குழந்தைகள் கணித அறிவையும் இழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த காலத்தில் மாணவர்களின் இடைநிற்றல் அதிகரித்து, வேலைக்கு அனுப்பப்படுகின்றனர் என்றும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இது பெரும் அதிர்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.