கடனை வாங்கி கடனை அடைத்த ஒரே அரசு திமுக அரசாங்கம் தான் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளாசினார்.
தமிழக அரசின் பட்ஜெட், அதற்க்கு முன் வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கை குறித்து விமர்சித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கடன் வாங்காத நாடே கிடையாது. கடன் கெப்பாசிட்டி பொருத்தவரை… நான் உங்ககிட்ட கடன் கொடுக்கின்றேன் என்றால்…. அந்தக் கடன் கொடுக்கிறவுங்க நினைக்கணும் உங்களால திருப்பி செலுத்த முடியுமானு…. ஆனா நாங்க திருப்பி செலுத்துகின்ற கேப்பாசிட்யோடது தான் எங்களுடைய கவர்மெண்ட் இருந்துச்சு.
இன்னும் சொல்லப் போனால்… 50 ஆயிரம் கோடிக்கு கடன் வாங்க கூடிய அளவுக்கு சக்தி கவர்மெண்ட்டுக்கு இருக்கு. நாங்க ஒன்னும் திவாலாகிப் விட்டு வரல.அந்த அளவுக்கு பைனான்சியல் அளவை வச்சுட்டு தான் வந்தோம். இதனை சாதாரண பாமர மக்கள் சொல்லுவாங்க.முந்தைய ஆட்சியில் எப்படி பண்றாங்க…. வாங்கிய கடனை வைத்து கடனை அடைத்தார்கள்.
கடன் வாங்கி உருப்படியா மூலதன செலவு, ஒரு பில்டிங், ஹாஸ்டலில், பாலம், டம் கட்டுவது , ரோடு போடுவது அடிப்படை கட்டமைப்பு வசதி, உள்கட்டமைப்பு வசதியை உருவாக்க எதாவது செய்தார்களா ? ஒரு உதாரணம் சொல்கிறேன்…. எல்லாருக்கும் கடன் கொடுக்க வேண்டியது தான். அந்த கடன் நம்முடைய மாநிலத்தின் வருவாயில் இருந்து செலவீனம் செய்யணும்.
ஆனால் அந்த கடனை வாங்கி விவசாய கடனை அடைந்தார்கள்…. விவசாயிகளுக்கு கடன் கொடுக்க வேண்டியது தான், மீனவர்களுக்கு கடன் கொடுக்க வேண்டியது தான். அனால் அது மாநில வருவாயில் இருந்து அடைப்பது தான் புத்திசாலித்தனம். ஆனால் கடனை வாங்கி கடனை அடைத்த ஒரே அரசு திமுக அரசாங்கம் தான் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளாசினார்.