இந்தியாவிலிருந்து ஆப்கானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க விமானம் செல்கிறது..
ஆப்கானிஸ்தானில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக தலிபான்களுக்கும் அரசுப்படைகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது.. அரசுப்படைகளுடன் இணைந்து அமெரிக்கப்படைகளும் போரிட்டு வந்தனர்.. இந்த சூழலில் அமெரிக்கப்படைகள் அங்கிருந்து திரும்ப பெறப்படும் என அதிபர் பைடன் அறிவித்தார்.. அதன் தொடர்ச்சியாக பல்வேறு நகரங்களையும், மாகாணங்களையும் தலிபான்கள் கைப்பற்றி வந்தனர்.. அதனை தொடர்ந்து காபூல் நகரமும் அவரது கட்டுப்பாட்டில் வந்துவிட்டது.. குடியரசுத் தலைவரான அஷ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேறி விட்டார்..
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தூதர்களும் அங்கிருந்து வெளியேறி விட்டார்கள். காபூல் விமான நிலையத்திலிருந்து தொடர்ந்து விமானங்கள் மூலம் தூதர்கள் மற்றும் பல முக்கிய அதிகாரிகள் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.. இந்த சூழ்நிலையில் தலிபான்கள் கண்ட்ரோலில் அதாவது முழுமையான கட்டுப்பாட்டில் தலைநகரமான காபூல் வந்துவிட்டது..
இந்த சூழ்நிலையில் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் தங்களுடைய நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு ஆப்கானிஸ்தானில் எந்தவித தீங்கும் வந்துவிடக்கூடாது என அவர்களின் பாதுகாப்பு கருதி அவர்களை அங்கிருந்து வெளியேற்றி கொண்டிருக்கின்றனர்.. இந்தியா நேற்று அனுப்பிய விமானம் மூலம் 129 பேர் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்..
இந்நிலையில் இந்தியாவிலிருந்து ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க இன்று பிற்பகல் 12 : 30 க்கு அடுத்த விமானம் செல்கிறது.. டெல்லியிலிருந்து காபூலுக்கு 12 : 30 க்கு புறப்படும் விமானம் அங்குள்ள இந்தியர்களை அழைத்து வரும்..
இதற்கிடையே உலக நாடுகள் தங்களை கைவிட்டு விட்டதாக ஆப்கானிஸ்தான் மக்கள் வேதனை தெரிவித்து வரும் நிலையில் ஆப்கானிஸ்தான் போர் முடிவுக்கு வந்துவிட்டதாக தலிபான் அமைப்புகள் அதிகார்வப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்..