தலிபான்கள் நேற்று தலைநகர் காபூலை கைப்பற்றியதை தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் தலிபான்கள் வசமாகமாறியது. அதிபர் அஷ்ரப் கனி ஆப்கனில் இருந்து வெளியேறிய நிலையில் தலிபான்கள் வசம் ஆட்சிப் பொறுப்பு சென்றது. இதனைத்தொடர்ந்து, அந்நாட்டு மக்கள் பலர் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆட்சியை கைப்பற்றிய நிலையில் போர் முடிவுக்கு வந்ததாக தலிபான்கள் அறிவித்துள்ளனர்.தலிபான்கள் ஆட்சி பொறுப்பை ஏற்றதால், காபூல் நகருடனான விமானப் போக்குவரத்தை பெரும்பாலான நாடுகள் ரத்து செய்து விட்டன.அதுமட்டுமின்றி ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற காபூல் விமான நிலையத்தில் அந்நாட்டு மக்கள் குவிந்துள்ளனர். உலக நாடுகள் தங்களை கைவிட்டுவிட்டதாக மக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.