சட்ட பேரவை முன்னாள் உறுப்பினர்கள் மதுசூதனன், திண்டிவனம் ராமமூர்த்தி உட்பட 9 பேர் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது..
தமிழக சட்டப்பேரவை கூட்டம் கலைவாணர் அரங்கில் தொடங்கி நடைபெற்று கொண்டிருக்கிறது.. பேரவை முன்னாள் உறுப்பினர்கள் மதுசூதனன், திண்டிவனம் ராமமூர்த்தி உட்பட 9 பேர் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.. மேலும் மருத்துவர் எஸ். காமேஸ்வரன் மதுரை ஆதீனம் உள்ளிட்ட 5 பேருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..
அதனை தொடர்ந்து நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை தொடர்பான பொது விவாதம் நடைபெற உள்ளது.. 3 நாட்களுக்கு நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதம் நடத்தப்படுகிறது.. பின்னர் அமைச்சரின் பதில் உரை இடம்பெறும்.