தீடிரென உணரப்பட்டுள்ள சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தினால் 724 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வட அமெரிக்காவில் ஹைதி என்ற தீவு அமைந்துள்ளது. அந்த தீவில் கடந்த 14 ஆம் தேதி மிகவும் பயங்கரமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவாகி உள்ளது. இந்த பயங்கரமான நிலநடுக்கத்தினால் ஏராளமான கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ளது. இதனால் மக்கள் பீதியடைந்து தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறி தெருக்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தினை தொடர்ந்து அந்த தீவில் மற்றொரு நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது லெஸ்லி கெய்ஸின் என்ற பகுதியிலிருந்து 38 கி.மீ தொலைவில் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவாகி உள்ளது எனவும், பூமிக்கு அடியில் 40 கி. மீ ஆழத்தில் மையம் கொண்டுள்ளதாகவும் ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த பயங்கரமான நிலநடுக்கத்தினால் 724 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 2,800 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் மீட்பு பணியானது தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.