தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் என்பது தற்போது நடைபெற்று வருகிறது. அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும், திருப்புவனம் சட்டமன்ற உறுப்பினருமான ஆர் பி உதயகுமார் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசியிருந்தார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற காலம் தாழ்த்துவதற்காகவே வெள்ளை அறிக்கை என்பது வெளியிடப்பட்டதா என்ற கேள்வியை எழுப்பி இருந்தார். அதற்கு பதிலளித்துப் பேசிய தமிழக முதலமைச்சர், பல்வேறு விஷயங்களில் கடந்த காலங்களில் அதிமுக தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி இருக்கிறீர்களா ?என்ற கேள்வியும் எழுப்பியுள்ளார்.
முன்னுரையில் திட்டம் கொண்டு வருவோம் என்று சொன்னீர்கள் ஆனால் திமுக அரசு கொண்டு வந்த மெட்ரோ ரயில் திட்டத்தை அதிமுக நிறைவேற்றியது. செல்போனை கொடுப்பதாக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தீர்கள்… ஆனால் ஒருவருக்கு கூட கொடுக்கப்படவில்லை. வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்கப்படும் என்று தெரிவித்திருந்து…. இதேபோல பல்வேறு விஷயங்களைப் பட்டியலிட்டு திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு க ஸ்டாலின் தற்போது பல்வேறு கேள்வியை தமிழக சட்டசபையில் அதிமுகவிடம் முன்வைத்துள்ளார்.
அது மட்டுமல்லாமல் தேர்தல் வாக்குறுதியை பொறுத்தவரை… திமுக தொடர்ச்சியாக சொன்னதையும் செய்து வருகிறது. சொல்லாததையும் நிறைவேற்றி வருகிறது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பேசினார்.
கொரோனா காலத்தில் நான்காயிரம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தும், அதுமட்டுமல்லாமல் சொல்லாத வாக்குறுதியாக 14 வகையான மளிகைப் பொருட்கள் என்பதையும் நிறைவேற்றி விட்டோம். இது போன்ற பல்வேறு விஷயங்களை முன்னிறுத்தி தான் தன்னுடைய பணியை அரசு நிறைவேற்றுவதாகவும், விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி, நகை கடன் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் முறைகேடு நடைபெற்றுள்ளது.
அந்த முறைகேடுகள் தொடர்பாக முழுமையான ஆதாரத்துடன் தன்னுடைய விளக்கத்தை அரசு மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் நிச்சயமாக பேசுவோம் என்ற ஒரு உறுதியையும் தமிழக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். தேர்தல் வாக்குறுதியை பொறுத்தவரை நிச்சயமாக திமுக அரசு பின்வாங்கப் போவதில்லை. நிச்சயமாக நிறைவேற்றுவோம் என்ற உறுதியை தமிழக முதலமைச்சர் தற்போது அளித்துள்ளார்.