Categories
உலக செய்திகள்

பதவி விலகிய ஆப்கான் அதிபர்…. பிரித்தானியாவில் அவசர கூட்டம்…. ஆலோசனையில் பிரதமர் போரிஸ் ஜான்சன்….!!

ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியது தொடர்பாக பிரதமர் போரிஸ் ஜான்சன் அவசர கூட்டத்தை பிரித்தானியாவில் நடத்தியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் காபூலை கைப்பற்றியதை தொடர்ந்து அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார். இதனையடுத்து அவர் தஜிகிஸ்தானுக்கு தப்பிச் சென்றதாக தகவல்கள் வெளியானது. இதனை தொடர்ந்து தலீபான்கள் அந்நாட்டை  ‘ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அமீரகம்’ என அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் நேற்று அவசரக் கோப்ரா கூட்டமானது பிரித்தானியா பிரதமர் தலைமையில் நடைபெற்றது. அதில் போரிஸ் ஜான்சன் கூறியதாவது “ஆப்கானிஸ்தானில் நிலைமை மிகவும் கடினமாக உள்ளது. இனிமேல் எந்த ஒரு புதிய அரசாங்கமும் ஆப்கானில் உருவாகும்போது உடன்பாடு இன்றி அங்கீகரிக்க போவதில்லை.

மேலும் ஒருமித்த கருத்துகள் கொண்ட அனைத்து சக்திகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளின் தாயகமாக ஆகிவிடக்கூடாது. அதற்காக மேற்கு நாடுகள் அனைத்தும் கூட்டாக செயல்படுவது மிகவும் முக்கியம்” என்று கூறியுள்ளார். இது தொடர்பான மற்றொரு கூட்டமானது பிரித்தானியாவில் வரும் புதன்கிழமை அன்று பாராளுமன்றத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காபூலில் உள்ள பிரித்தானிய தூதர் அங்குள்ள அந்நாட்டு மக்களை பாதுகாப்பதற்காக 24 மணி நேரமும் பணியாற்றி வருகிறார் என்று போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.

Categories

Tech |