Categories
தேசிய செய்திகள்

ஒட்டு கேக்கல.. பெகாசஸ் விவகாரத்தை விசாரிக்க குழு – மத்திய அரசு..!!

பெகாசஸ் உளவு புகார்கள் குறித்து விசாரிக்க  குழு அமைக்கப்படும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது..

தற்பொழுது இரண்டு பக்கங்களைக் கொண்ட பிரமாண பத்திரத்தை மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.. முன்னதாக இந்த பெகாசஸ் உளவு மூலமாக  பத்திரிக்கையாளர்கள், அரசியல் தலைவர்கள், தேர்தல் அதிகாரிகள், நீதிபதிகள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலரது தொலைபேசிகளை உளவு பார்க்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.. பொதுவாக தீவிரவாதம் உள்ளிட்டவற்றை அடக்குவதற்காக அரசுகளுக்கு மட்டும்தான் அந்த நிறுவனமானது தகவல்களை வழங்குவார்கள்..

ஆனால் இந்தியாவில் பத்திரிக்கையாளர் உள்ளிட்ட பலரது அலைபேசிகள் உளவு பார்க்கப்பட்டது. மத்திய அரசுக்கு தெரிந்து தான் நடந்தது என பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்னெடுத்த நிலையில் மூத்த பத்திரிக்கையாளர் இந்து என். ராம் உள்ளிட்டோர் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.. கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டார்கள்..

இந்த நிலையில் இரண்டு பக்கங்களைக் கொண்ட பிரமாண பத்திரத்தை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.. அதில், இந்த சர்ச்சை மற்றும்  பிரச்சினைகள் குறித்தும் ஆய்வு செய்வதற்காக நிபுணர்கள் கொண்ட குழு அமைக்கப்படும்  என மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.. மேலும் அரசுக்கு எதிரான அத்தனை குற்றச்சாட்டுகளையும் தாங்கள் மறுத்ததாகவும், ஒட்டு கேட்கவில்லை எனவும் மத்திய அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது..

Categories

Tech |