Categories
அரசியல் மாநில செய்திகள்

ஏழைகளுக்கு மட்டுமல்ல…. தகுதியான எல்லாருக்கும் உண்டு…. அமைச்சர் சக்ரபாணி பதிலடி…!!!

தமிழக சட்டப்பேரவையில் முதன்முறையாக ஆகஸ்ட் 13-ஆம் தேதி காகிதம் இல்லா இ-பட்ஜெட்டை நிதியமைச்சரால் தாக்கல் செய்யப்பட்டது. அதனையடுத்து ஆகஸ்ட் 14ஆம் தேதி.எம்ஆர் .கே பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்தார். இதில் பல்வேறு முக்கிய திட்டங்கள் இடம் பெற்றிருந்தன. இதற்கு பலரும் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்திருந்த நிலையில் இன்று  பட்ஜெட் மீதான விவாதம் நடைறுகிறது. இதற்கான தமிழக சட்டப்பேரவை கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியது.

இதில் தங்கராசு, ராமச்சந்திரன், பண்ணை சேதுராம், புலவர் செங்குட்டுவன் உள்ளிட்டோர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பின் பட்ஜெட் பட்ஜெட் மீதான பொதுவிவாதம் தொடங்கியது. பொது மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கைகள் மீது இன்று தொடங்கிய விவாதம் வரும் 19ம் தேதி வரை நடக்கிறது. இதில் அனைத்து இல்லத்தரசிகளுக்கும் 1000 ரூபாய் என வாக்குறுதி கொடுத்தீர்கள். ஆனால் தற்போது ஏழ்மையான குடும்பத்திற்கு மட்டும் என சொல்றீங்க என்று எடப்பாடி பழனிசாமி கேள்வியெழுப்ப, “ஏழையானவர்களுக்கு மட்டுமல்ல, தகுதி வாய்ந்த அனைவருக்கும் வழங்கப்படும்” அமைச்சர் சக்கரபாணி பதிலடி கொடுத்துள்ளார்.

Categories

Tech |