Categories
உலக செய்திகள் சற்றுமுன் தேசிய செய்திகள்

ஆப்கானில் சிக்கிய இந்தியர்கள்…! என்ன செய்யலாம் ? தீவிர ஆலோசனையில் இந்தியா …!!

ஆப்கானிஸ்தான் காபூல் விமான நிலையத்தில் துப்பாக்கி சூடு நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தான் காபூல் விமான நிலையம் மூடப்பட்டுள்ளதால் அங்கு சிக்கி கொண்டுள்ள இந்தியர்களை மீட்பதில் சிக்கல் எழுந்துள்ளது. வெளியுறவுத்துறை தரப்பில் பேச்சு வார்த்தை என்பதைத்தான் முதலில் தொடங்க வேண்டும்.  ஏனென்றால் அஷ்ரப் கனியை  தான் இந்தியா ஆதரித்து வந்தது. தற்போது அவர் நாட்டை விட்டு வெளியேறி விட்டதாகவும்,  அங்கு இருக்கக்கூடிய ஆப்கான் படைகள் தொடர்ந்து தாலிபான்களிடம் சரண் அடைந்து வருவதால் அங்கு இருக்கக்கூடிய மக்களுக்கு பாதுகாப்பு என்பது வழங்க முடியாத ஒரு சூழல் தான் இருந்து வருகிறது. அது தான் அங்கு இருக்கக்கூடிய நிலைமை.

இன்னும் சொல்லப்போனால் அமெரிக்கர்கள் தங்கள் இருக்கக்கூடிய இல்லங்களிலேயே பத்திரமாக இருந்து கொள்ளுங்கள் என்ற ஒரு விஷயத்தை தான் சொல்லி இருக்கின்றார்கள். இதில் எத்தனை பேர் காணாமல் போனவர்கள் ? எத்தனை பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள் ? எத்தனை பேர் சிறை பிடிக்கப்பட்டு இருக்கிறார்கள் ? உள்ளிட்ட தகவல் எல்லாம் முழுமையாகக் கிடைக்காத சூழலில்  தான் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் அங்கு இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. படிப்பதற்காக சென்றவர்கள், தொழில் நிமித்தமாக சென்றவர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும் அந்தத் துறையை சார்ந்தவர்கள் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். அரசு அதிகாரிகள், அவர்களது குடும்பத்தினர், குழந்தைகள் என ஏராளமானோர் இருக்கிறார்கள்.

பொதுவாகவே இந்தியாவின் தரப்பில் சமீபத்தில் நிறைய அடிப்படை கட்டமைப்பு மேம்பாட்டிற்காக நிறைய முதலீடு செய்யப்பட்டு இருக்கிறது. அதற்காக இந்தியாவிலிருந்துதான் காண்ட்ராக்டர்கள் உள்ளிட்டோர் அங்கே அழைத்துச் செல்லப்பட்டிருந்தார். கொரோனா என்பதால் விமானங்கள் போதுமான அளவில் இயக்க முடியாத சூழலில் இருந்ததனால் நிறைய பேரால் திரும்பி வர முடியவில்லை. நேற்றைய தினம் இந்தியா திரும்பியவர்கள் பேட்டியளித்தபோது ஏராளமானோர் சிக்கி இருக்கிறார்கள். அவர்களை பத்திரமாக உயிருடன் மீட்து என்பது சவாலான விஷயம்தான் என்பதாகத்தான் கூறியிருந்தார்கள்.

தற்போது வரை வேறு இடங்களிலிருந்து வன்முறையை அதிகமாக வந்ததாக தெரியவில்லை. முதலில் தாலிபன்கள் ஆட்சி அதிகாரத்தை முழுமையாக எடுத்துக் கொள்வதற்கான பணியில் இருக்கிறார்கள். எனவே அதிகாரம் முழுமையாக அவர்களுக்கு கைமாறியதற்குப் பிறகுதான் வேறு எந்த மாதிரியான விஷயங்களை அவர்கள் செய்யப்போகிறார்கள் ? உலகளாவிய  ஒப்பந்தங்களை அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா ? அல்லது தொடர்ந்து கடந்த காலங்களில் நடந்த அதே போல நடந்து கொள்வார்களா ? என்று பார்க்கவேண்டி இருக்கிறது.

மத்திய அரசை பொறுத்தவரை ஆலோசனை என்பது நடந்து கொண்டு இருக்கிறது. ஏனென்றால் தாலிபான்களுடன் எப்படி பேச்சுவார்த்தை தொடங்குவது ? பேச்சுவார்த்தை  தொடங்குவது என்றால் தலிபான்கள் அரசை அங்கீகரிக்க வேண்டிய நெருக்கடி ஏற்படலாம். இதையெல்லாம் ராஜாங்க ரீதியாக பார்க்கவேண்டி இருக்கிறது. ஆனால் முதலில் மீட்புப் பணிகள் மிகவும் முக்கியம். ஆனால் அதிலும் சற்று தொய்வு நிலை ஏற்பட்டிருக்கிறது. உளவுத்துறையின் எச்சரிக்கைகள் உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் தற்பொழுது மத்திய அரசு கவனத்தில் கொண்டு ஆலோசனைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள்.

 

Categories

Tech |