Categories
உலக செய்திகள்

அதிபர் மாளிகையில் உரை…. அமைதியான அரசாங்கம் உருவாகும்…. காணொளி வெளியிட்ட தலீபான்கள் அமைப்பு….!!

ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதை அடுத்து அந்நாட்டில் உள்ள அதிபர் மாளிகையில் தலீபான்கள் அமைப்பின் தலைவர் உரையாற்றியுள்ளார்.

ஆப்கானிஸ்தானை தலீபான்கள் முழுவதுமாக கைப்பற்றியதை தொடர்ந்து அதிபர் அஷ்ரப் கனி அந்நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார். இதனை அடுத்து ஆப்கானிஸ்தான் மக்களும் அங்கிருந்து வெளியேற தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் நேற்று காபூல் நகருக்குள் நுழைந்த தலீபான்கள் தங்களது வெற்றியை கொண்டாடும் விதமாக அதிபர் மாளிகைக்குள் சென்று உரை ஒன்றை காணொளி மூலம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளனர். அதில் காபூலை கைப்பற்றி அதிபரை பதவியிலிருந்து விலக செய்தது பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது என்று தலீபான்கள் அமைப்பின் தலைவர் முல்லா பரதர் கூறியுள்ளார்.

இவர்களினால் பொதுமக்கள் துன்புறுத்தப்படுவார்கள் என்று எண்ணப்பட்டது. ஆனால் தலீபான்கள் திறந்த மற்றம் உள்ளடக்கிய இஸ்லாமிய அரசாங்கத்தை ஏற்படுத்தும் வகையில் ஆலோசனை நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் அமைதியான முறையில் அதிகாரத்தை மாற்றியமைப்போம் என்று கூறியுள்ளனர். இருப்பினும் விமான நிலையத்தில் தலீபான்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக நாட்டை விட்டு வெளியேற ஆயிரக்கணக்கான மக்கள் விமான நிலையத்தில் குவிந்துள்ளனர்.

Categories

Tech |