Categories
அரசியல் மாநில செய்திகள்

எல்லாருக்கும் 1,000 ரூபாய்னு சொன்னீங்க… இப்போ இப்டி சொல்றீங்க… எடப்பாடி கேள்வி..!!

அனைத்து இல்லத்தரசிகளுக்கும் 1,000 ரூபாய் என வாக்குறுதி கொடுத்தீர்கள் இப்போ ஏழை  இல்லத்தரசிகளுக்கு  மட்டும் என சொல்றீங்க” என்று ஈ.பி.எஸ் கேள்வி எழுப்பினார்.

தமிழக சட்டப்பேரவையில் முதன்முறையாக ஆகஸ்ட் 13-ஆம் தேதி காகிதமில்லாத டிஜிட்டல் முறையில் இ-பட்ஜெட் நிதியமைச்சரால் தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து ஆகஸ்ட் 14ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டை உழவர் நலத்துறை அமைச்சர்  எம்.ஆர் .கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.. இதில் பல்வேறு முக்கிய திட்டங்கள் இடம் பெற்றிருந்தன.. இதற்கு பலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்திருந்த நிலையில், இன்று  தமிழக சட்டப்பேரவை கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியது.

இதில் தங்கராசு, ராமச்சந்திரன், பண்ணை சேதுராம், புலவர் செங்குட்டுவன் உள்ளிட்டோர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பின், பட்ஜெட் மீதான பொதுவிவாதம் தொடங்கியது. இதில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி  ”அனைத்து இல்லத்தரசிகளுக்கும் 1000 ரூபாய் என வாக்குறுதி கொடுத்தீர்கள்.. ஆனால் தற்போது ஏழ்மையான இல்லத்தரசிகளுக்கு  மட்டும் என சொல்றீங்க” என கேள்வி எழுப்பினார்.. இதற்கு  பதிலளித்த அமைச்சர் சக்கரபாணி ஏழையானவர்களுக்கு மட்டுமல்ல, தகுதி வாய்ந்த அனைவருக்கும் வழங்கப்படும்” என்றார்.

Categories

Tech |