Categories
அரசியல் மாநில செய்திகள்

பெரிய பட்டியலே இருக்கு… ஒரு இடம் காட்டுங்க பாப்போம்… அதிமுகவை வெளுத்த முதல்வர் …!!

இன்று நடைபெற்ற சட்டப்பேரவையில் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், உங்கள் ஆட்சி நடைபெற்ற நேரத்தில் நீங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகள், உறுதிமொழிகளை  நாங்களும்…  நாட்டு மக்களும் மறக்கவில்லை.  தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் பலவற்றை நீங்கள் நிறைவேற்றியதில்லை, அதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.

உதாரணமாக சொல்லவேண்டுமென்றால் இலவச செல்போன் தரப்படும் என்று சொன்னீர்கள், ஒருவருக்க்காவது கொடுத்தீர்களா ? ஆவின் பால் பாக்கெட்டுக்கு 25 ரூபாய்க்கு விற்கப்படும் என்று சொன்னீர்கள்… செய்தீர்களா ? ஏழை மக்களுக்கு அம்மா மினரல் வாட்டர் இலவசமாக தரப்படும் என்று சொன்னீர்களே…. கொடுத்தீங்களா ?

குறைந்த விலையில் அவசியமான மல்லிகை பொருட்கள் தரப்படும் என்று உறுதிமொழி கொடுத்தீர்கள்…. வந்துச்சா ? அனைவருக்கும் அம்மா வங்கி அட்டை கொடுக்கிறோம் என்று உறுதி கொடுத்தீங்க… அது என்ன ஆச்சு ? கோ-ஆப்டெக்ஸ்ஸில் துணிகள் வாங்கி500 ரூபாய் கூப்பன் தரப்படும் என்று சொன்னீங்க…  அது கொடுத்தீங்களா ?  மகளிர் குழுக்களுக்கு பண்ணை அமைக்கப்படும்னு சொன்னீங்களே…. செஞ்சீங்களா ?

அனைத்து வணிகர்களுக்கான சிறப்பு வணிக வளாகங்களை கட்டித் தருவோம் என்று சொன்னீர்கள்… எங்காவது கட்டிக் கொடுத்து இருக்கிறீர்களா ? அனைத்து….  பொது இடங்களிலும் வைஃபை வசதி ஏற்படுத்தித் தருவோம் என்று சொன்னீர்கள் ஒரு இடம் காட்டுங்க…. டாக்டர் அம்பேத்கர் பவுண்டேஷன் அமைக்கப்படும் என்று சொன்னிங்க…  ஜவுளி பூங்கா உருவாக்குவோம் என்று சொன்னீர்களே…  உருவாக்கியிருக்கிறது.

சென்னையில் மோனோ ரயில் என்று சொன்னீர்கள்… அதற்கு அடுத்து கலைஞர் கொண்டு வந்த மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்ற்றுனீர்கள். இப்படி பெரிய பட்டியலே இருக்கு என முக.ஸ்டாலின் தெரிவித்தார்.

Categories

Tech |