Categories
உலக செய்திகள்

ஆப்கானில் நிலவும் பதற்றம்…. விமானத்தில் வந்த இந்தியர்கள்…. வான் எல்லை மூடல்….!!

தலீபான்களினால் ஆப்கானிஸ்தான் முழுவதும் கைப்பற்றப்பட்ட நிலையில் ஏர் இந்தியா நிறுவனம் மூலம் இந்தியர்கள் மீட்டு வரப்படுகின்றனர்.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நேட்டோ படைகள் வெளியேறியதை தொடர்ந்து அந்நாட்டில் தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்தது. இதனையடுத்து தலீபான்கள் பல்வேறு முக்கிய நகரங்களைக் கையகப்படுத்திய நிலையில் தலைநகர் காபூலையும் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். இதனால் ஆப்கானிஸ்தானின் முழு அதிகாரமும் தலீபான்களின் கையில் சிக்கியுள்ளது. இந்த நிலையில் அங்கு இருக்கும் இந்தியர்கள் மற்றும் இந்திய தூதரகங்களில் வேலை பார்க்கும் பணியாளர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

மேலும் அவர்களிடையே பாதுகாப்பற்ற நிலைமை உருவாகும் என்று அச்சம் எழுந்துள்ளது. இதனை தொடர்ந்து நேற்று ஆப்கானிஸ்தானில் இருந்து 129 பயணிகளுடன் விமானம் ஒன்று இந்தியா வந்துள்ளது. தற்பொழுது இன்று நண்பகல் 12.30 மணிக்கு ஏர் இந்தியா விமானம் ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூல் செல்ல இருந்தது. ஆனால் காபூலின் வான் எல்லை மூடப்பட்டதால் ஏர் இந்தியா விமானம் அங்கு செல்ல முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

Categories

Tech |