Categories
உலக செய்திகள்

அதிகமாகும் மக்கள் கூட்டம்… காபூல் விமான சேவை ரத்து….!!

ஆப்கான் தலைநகர் காபூலில் இருந்து புறப்படும் அனைத்து விமானமும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

ஆப்கானிஸ்தானில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக தலிபான்களுக்கும் அரசுப்படைகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது.. அரசுப்படைகளுடன் இணைந்து அமெரிக்கப்படைகளும் போரிட்டு வந்தனர்.. இந்த சூழலில் அமெரிக்கப்படைகள் அங்கிருந்து திரும்ப பெறப்படும் என அதிபர் பைடன் அறிவித்தார்..

அதன் தொடர்ச்சியாக பல்வேறு நகரங்களையும், மாகாணங்களையும் தலிபான்கள் கைப்பற்றி வந்த சூழ்நிலையில் காபூல் நகரத்தையும் அவர்கள் கைப்பற்றினர்.. குடியரசுத் தலைவரான அஷ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேறி விட்டார்.. ஆப்கானிஸ்தான் போர் முடிவுக்கு வந்துவிட்டதாக தலிபான் அமைப்புகள் அதிகார்வப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்..

Video: Hundreds Jostle To Board Plane – Desperate Scenes At Kabul Airport –  CURRENTNEWSTV.IN

இதற்கிடையே பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தூதர்கள், மக்கள்  மற்றும் பல முக்கிய அதிகாரிகள் வெளியேறிக் கொண்டு இருந்தார்கள்.. அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தங்களுடைய நாட்டைச் சேர்ந்தவர்களை அங்கிருந்து வெளியேற்றி கொண்டிருந்தனர்..

இந்நிலையில் ஆப்கான் தலைநகர் காபூலில் இருந்து புறப்படும் அனைத்து விமானமும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.. மக்கள் கூட்டம் அதிகமாக கூடுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தலிபான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

Categories

Tech |