ஸ்டெர்லைட்டில் தொடர்ந்து ஆக்ஸிஜன் தயாரிக்க அனுமதிக்க கோரி போராடியவர்கள் மீதான வழக்குகளை விசாரிக்க உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது..
ஸ்டெர்லைட்டில் தொடர்ந்து ஆக்ஸிஜன் தயாரிக்க அனுமதிக்க கோரி மக்கள் போராடினர்.. அதனை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையின் துணைத்தலைவர் சுமதி உட்பட பலர் வழக்கு தொடுத்தனர்.. இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது..
அப்போது ஸ்டெர்லைட் ஆலையில் தொடர்ந்து ஆக்ஸிஜன் தயாரிக்க அனுமதிக்க கோரி போராடியவர்கள் மீதான வழக்குகளை விசாரிக்க உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.. மேலும் சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் பதில் மனு தாக்கல் செய்யவும் உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.