பள்ளி மாணவர்களின் இடாய்நிற்றலை தவிர்ப்பதற்காக தமிழக அரசு பள்ளிகளில் சத்துணவு திட்டம் செயல்.பட்டு வருகிறது. இந்த சத்துணவு திட்டத்தில் ஏராளமான மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர் இந்தத் திட்டத்தில் மாணவர்களுக்கு மதிய உணவோடு முட்டை, சுண்டல், பச்சைப் பயறு போன்ற சத்தான உணவு வகைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மாணவர்கலின் இடைநிற்றலை தவிர்ப்பதற்காக சத்துணவில் முட்டையுடன் சேர்த்து ரொட்டி வழங்கலாமா? என்பது குறித்து தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. மேலும் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் ரொட்டி வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.