சுதந்திர தினத்தை முன்னிட்டு தடையை மீறி மது விற்பனை செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தமிழகம் முழுவதிலும் சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து மதுபான கடைகளும் மூடாட்டுள்ளது. இந்நிலையில் தேனி மாவட்டத்தில் தடையை மீறி மது விற்பனை செய்யபடுகின்றதா என காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இதனையடுத்து ராஜதானி காவல்துறையினர் ஆண்டிபட்டி அருகே உள்ள பாலக்கோம்பை சாலையில் சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர்.
அப்போது மேக்கிழார்பட்டியை சேர்ந்த சிவக்குமார் என்ற இளைஞர் பதுக்கி வைத்து மதுபாட்டில்கள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன் அடிப்படையில் காவல்துறையினர் சிவக்குமாரை கைது செய்து அவரிடம் இருந்த 211 மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.